மாநில செய்திகள்

ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு + "||" + Jeyalalitha Memorial open at Nov 27

ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு

ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு
ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி இறந்தார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரை ஓரத்தில் எம்.ஜி.ஆர். சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. இந்த இடத்தில் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்ட முடிவெடுக்கப்பட்டது. இந்த பணியை கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 8-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து இரவு, பகலாக ஒப்பந்தக்காரர்களுடன், பொதுப்பணித்துறை தீவிரமாக பணிகளில் ஈடுபட்டு வந்தது. கொரோனா மற்றும் மழை காரணமாக திட்டமிட்ட காலத்தில் பணிகள் முடிப்பதில் சற்று காலதாமதம் ஆனது. இருந்தாலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கடி பணிகளின் முன்னேற்றம் குறித்து அடிக்கடி ஆய்வு செய்து ஆலோசனை வழங்கி வந்தார். தற்போது நினைவிடம் பணிகள் நிறைவடைந்து உள்ளது. 

இந்த நிலையில், வரும் 27 ஆம் தேதி ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. காலை 11 மணிக்கு தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க இருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. சசிகலா தமிழகம் புறப்பட்ட நிலையில் ஜெயலலிதா நினைவிடம், அதிமுக அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
சசிகலா தமிழகம் புறப்பட்ட நிலையில் ஜெயலலிதா நினைவிடம், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
2. சென்னையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தை பார்வையிட தடை விதிப்பு
சென்னையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தை பார்வையிட தடை விதிக்கப்படுவதாக பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.
3. ஜெயலலிதா நினைவிட சிறப்பு அம்சங்கள்
ஜெயலலிதா நினைவிடத்தில் இடம்பெற்றுள்ள சிறப்பு அம்சங்கள் வருமாறு:-
4. ஜெயலலிதா நினைவிட சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
ஜெயலலிதா நினைவிட சிறப்பு அம்சங்கள் என்னென்ன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. ஜெயலலிதா நினைவிட திறப்பு விழா: அ.தி.மு.க.வினர் திரண்டதால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்
ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவுக்காக சென்னை வந்தவர்கள் வாகனங்களில் ஊர் திரும்புவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.