மு.க.ஸ்டாலினிடம் பொதுமக்கள் புகார் அளிக்க புதிதாக முதல்-அமைச்சர் தனிப்பிரிவு இணையதளம் தொடக்கம்


மு.க.ஸ்டாலினிடம் பொதுமக்கள் புகார் அளிக்க புதிதாக முதல்-அமைச்சர் தனிப்பிரிவு இணையதளம்  தொடக்கம்
x
தினத்தந்தி 9 Jun 2021 3:29 AM GMT (Updated: 2021-06-09T11:02:51+05:30)

முதல்-அமைச்சர் முக ஸ்டாலினிடம் பொதுமக்கள் புகார் அளிக்க முதல்-அமைச்சர் தனிப்பிரிவு இணையதளம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை,

முதல்-அமைச்சர் முக ஸ்டாலினிடம் பொதுமக்கள் புகார் அளிக்க முதல் அமைச்சரின் தனிப்பிரிவு இணையதளம் இன்று புதிதாக தொடங்கபப்ட்டுள்ளது. 

இந்த தனிப்பிரிவில் cmcell.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் தங்கள் புகார்களை அளிக்க அளிக்கலாம். 

தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் இந்த இணையதளம் செயல்படுகிறது. பொதுமக்கள் இந்த இணையதளம் மூலம் தங்கள் புகார்களை அளிக்கலாம். 

புகார்கள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அந்த இணையதளத்தில் தெரிந்து கொள்ளவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

Next Story