அரியலூர் அருகே கணவன்-மனைவி அடித்துக் கொலை; நகை பணம் கொள்ளை


அரியலூர் அருகே கணவன்-மனைவி அடித்துக் கொலை; நகை பணம் கொள்ளை
x
தினத்தந்தி 9 Jun 2021 9:34 AM GMT (Updated: 2021-06-09T15:04:12+05:30)

அரியலூர் மாவட்டத்தில் தூங்கிக் கொண்டிருந்த கணவன் மனைவியை அடித்துக் கொலை செய்து தப்பிச்சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

அரியலூர்

அரியலூர் அருகே உள்ள அல்லிநகரம் கிராமத்தை சேர்ந்த தம்பதி பெரியசாமி (62). தனது முதல் மனைவியை இழந்த பெரியசாமி இரண்டாவதாக அறிவழகியை (48) திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு முருகானந்தம் என்ற மகனும் மற்றும் சத்யா என்ற மகளும் உள்ளனர். முருகானந்தம் சென்னையில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றி வருகிறார். சத்யாவிற்கு திருமணம் முடிந்து கணவர் வெங்கடேசனுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் இன்று காலையில் இருந்து  பெரியசாமியும் அவரது மனைவியும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை எனத் தெரிகிறது. இந்ததகவலை அக்கம்பக்கத்தினர் உறவினர்களிடம் கூற, அவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். வீட்டின் வெளிப்புறக்கதவு பூட்டியிருந்த நிலையில், சந்தேகமடைந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது பெரியசாமியும் அவரது மனைவியும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். மேலும் அறிவழகியின் கழுத்து, கைகளில் கிடந்த நகைகளையும் கொள்ளையர்கள் திருடிச்சென்றுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அதிகாலை வேளையில் 3 நபர்கள் டவுசர் மட்டும் அணிந்து கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றது தெரியவந்தது. மேற்கொண்டு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Next Story