கொரோனாவை கட்டுப்படுத்துவதே முதன்மையான பணி

கொரோனாவை கட்டுப்படுத்துவதே முதன்மையான பணி
கோவை
கொரோனாவை கட்டுப்படுத்துவதே எனது முதன்மையான பணி என்று கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக பொறுப்பேற்ற ராஜகோபால் சுங்கரா தெரிவித்தார்.
புதிய ஆணையாளர் பொறுப்பேற்பு
தமிழக அரசு 24 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டது. அதில் கோவை மாநகராட்சி ஆணையாளராக இருந்த குமாரவேல் பாண்டியன் வேலூர் மாவட்ட கலெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதையடுத்து கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக ராஜகோபால் சுங்கரா நியமிக்கப்பட்டார். அவர், நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் அரசு கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்று கொண்டார்.
இதைத்தொடர்ந்து ராஜகோபால் சுங்கரா நிருபர்களிடம் கூறியதாவது
கோவை மாநகரில் கொரோனாவை கட்டுப்படுத்துவதே எனது முதன்மையான பணி. 2-வது கொரோனா பாதித்த மற்றும் கட்டுப் பாட்டு பகுதியில் உள்ள மக்களுக்கும் வழங்கல் பிரிவை சிறப்பாக செயல்படுத்து, 3-வது மக்களின் குறைகளை தீர்க்க நடவடிக்கைகள் எடுப்பது ஆகும்.
அனுமதியில்லாத கடைகள்
தற்போது கொரோனா 2-ம் அலை பரவல் இருக்கும் நிலையில் 3-ம் அலையை எதிர்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியது உள்ளது.
மாநகரில் அரசு அனுமதியில்லாமல் செயல்படும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை கண்காணிக்க ஏற்கனவே மண்டலங்கள் வாரியாக குழுக்கள் நியமிக்கபட்டுள்ளது. அனுமதியில்லாமல் கடைகள் செயல்படுவது கண்டறியப்பட்டால் அந்தநிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை மாநகராட்சியில் உள்ளதுபோல கொரோனா பாதித்து வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கு தேவையான பொருட்களை வழங்க அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து நடவடிக் கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதிகாரிகளுடன் ஆலோசனை
இதையடுத்து முன்னாள் ஆணையாளர் குமாரவேல் பாண்டியனை சந்தித்த ராஜகோபால் சுங்கரா, கோவையில் கொரோனா பரவல் மற்றும் தடுப்பு பணிகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.
பின்னர் அவர் மாநகராட்சி அதிகாரிகளுடன் கொரோனா பரவலை தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story