எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் கூட்டங்களில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம்


எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் கூட்டங்களில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம்
x
தினத்தந்தி 17 Jun 2021 8:28 AM GMT (Updated: 2021-06-17T16:20:10+05:30)

எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம் தலைமையில் நடந்த அ.தி.மு.க கூட்டங்களில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றபட்டது.

சென்னை

சசிகலா தொண்டர்களிடம் தொலைபேசியில் பேசும் வீடியோ அவ்வப்போது வெளியாகி அ.தி.மு.க.வினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய முன்னாள் அமைச்சர் உள்பட 16 பேர்  அ.தி.மு.க.வில் இருந்து திடீரென நீக்கப்பட்டனர். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.

இருந்தும் தொடர்ந்து சசிகலா பேசும் ஆடியோ பதிவுகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் அ.தி.மு.க சார்பில் மாவட்டந்தோறும்  கூட்டம் கூட்டப்பட்டு சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

விழுப்புரம் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. கூட்டம் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அதிமுக குறித்து பேச சசிகலாவுக்கு தகுதியில்லை என சி.வி.சண்முகம் கூறினார்.

இதுபோல் சேலத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அ.தி.மு.க கூட்டத்தில் சசிகலாவுக்கு எத்ராக தீர்மானம் நிறைவேற்றபட்டது.

 வடசென்னை தெற்கு மாவட்டம் சார்பாக நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் வி.கே.சசிகலாவை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Next Story