அரசு கேபிள் சேவை குறித்த புகாருக்கு இலவச தொலைபேசி எண் - அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு


அரசு கேபிள் சேவை குறித்த புகாருக்கு இலவச தொலைபேசி எண் - அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு
x
தினத்தந்தி 17 Jun 2021 4:07 PM GMT (Updated: 2021-06-17T21:37:06+05:30)

தனியார் நிறுவன செட்டாப் பாக்ஸ் வைத்து கூடுதல் கட்டணம் வசூலித்தால், புகார் அளிப்பதற்கான இலவச தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவையை விரும்பும் பொதுமக்கள் அந்தப் பகுதியில் உள்ள அரசு கேபிள் டிவி சேவையை வழங்கும் ஆபரேட்டரிடம் அதற்கான இணைப்பை கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம். இந்த சேவை தனியார் நிறுவனங்களை விட குறைந்த கட்டணத்தில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் சிலர் அரசு செட்டாப் பாக்ஸை பொதுமக்களுக்கு வழங்காமல், தனியார் நிறுவன செட்டாப் பாக்ஸ்களை வழங்கி கூடுதல் தொகை வசூலித்து வருவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து அரசு கேபிள் சேவையை வழங்காத ஆபரேட்டர்கள் குறித்து பொதுமக்கள் புகார் அளிப்பதற்கான இலவச தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 18004252911 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம் என தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். மேலும் அரசிற்கு வருவாய் இழப்பீட்டை ஏற்படுத்தும் கேபிள் ஆபரேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரித்துள்ளார்.

Next Story