தென்மேற்கு பருவமழை நீடித்து பெய்ய வாய்ப்பில்லை: இந்திய வானிலை மையம்


தென்மேற்கு பருவமழை நீடித்து பெய்ய வாய்ப்பில்லை: இந்திய வானிலை மையம்
x
தினத்தந்தி 20 Jun 2021 2:48 PM GMT (Updated: 2021-06-20T20:18:49+05:30)

தென்மேற்கு பருவமழை நீடித்து பெய்ய வாய்ப்பு இல்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

வட மாநிலங்களில் தென்மேற்கு பருவ காற்று மெதுவாக முன்னேறி வருவதால் நீடித்த மழைக்கு வாய்ப்பில்லை என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கையில், 

ராஜஸ்தான், மேற்கு உத்தரப் பிரதேசம், ஹரியானா, சண்டிகர், டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய பகுதிகளில் தென்மேற்கு பருவக்காற்று மெதுவாக முன்னேறி வருவதால் நீடித்த மழைக்கு வாய்ப்பில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Next Story