உறவுக்கு கை கொடுப்போம் , உரிமைக்கு குரல் கொடுப்போம் என்பதற்கு ஏற்ப மத்திய அரசுடன் நல்லுறவு பேணுவோம் - கவர்னர் உரை


உறவுக்கு கை கொடுப்போம் , உரிமைக்கு குரல் கொடுப்போம் என்பதற்கு ஏற்ப மத்திய அரசுடன் நல்லுறவு பேணுவோம்  - கவர்னர் உரை
x
தினத்தந்தி 21 Jun 2021 4:55 AM GMT (Updated: 2021-06-21T10:25:56+05:30)

16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் தொடங்கியது; கவர்னர் உரையாற்றி வருகிறார்.

சென்னை

16 -வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித்  உரையுடன் தொடங்கியது.கவர்னர்  தனது உரையை, ``வணக்கம்” என தமிழில் தொடங்கினார். மேலும், ``தமிழ் இனிமையான மொழி. எளிமையான வாழ்க்கையை வாழுங்கள்’’ என்றார்.

தொடர்ந்து  உரையாற்றிய கவர்னர் மேலும்  கூறியதாவது;-

அரசின் ஒவ்வொரு செயலும் சமூகநீதி, ஆண் பெண் சமத்துவம், அனைவருக்கும் பொருளாதார நிதியை அடிப்படையாக கொண்டிருக்கும். மாநிலங்களுக்கு சுயாட்சி என்ற இலக்கை எட்ட அரசு உறுதியாக உள்ளது.

முன்னாள் முதல்வர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட உழவர் சந்தைகள் தமிழகம் முழுவதும் மீண்டும் அமைக்கப்படும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தேவைப்படும் உதவிகளுக்கு, பல்வேறு கோரிக்கைகளாக பிரதமரிடம் முதல்வர் முன்வைத்திருக்கிறார்.

ஒன்றிய அரசு வழங்கும் தடுப்பூசியின் ஒதுக்கீடு போதுமான அளவில் இல்லை. தமிழகத்திற்கு ஒன்றிய அரசு ஒதுக்கும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை உயர்த்திட வேண்டும். `உறவுக்கு கை கொடுப்போம்.. உரிமைக்கு குரல் கொடுப்போம்’ என்ற கொள்கைக்கு ஏற்ப ஒன்றிய அரசுடன் நல்லுறவு பேணுவோம்  எனக் கூறினார்

Next Story