"திமுக அரசுக்கு கால அவகாசம் கொடுங்கள் , நிச்சயம் நல்லாட்சி தருவார்கள்" - கே.எஸ்.அழகிரி


திமுக அரசுக்கு கால அவகாசம் கொடுங்கள் , நிச்சயம் நல்லாட்சி தருவார்கள் - கே.எஸ்.அழகிரி
x
தினத்தந்தி 22 Jun 2021 3:59 AM GMT (Updated: 2021-06-22T09:29:26+05:30)

திமுக அரசுக்கு கால அவகாசம் கொடுங்கள் , நிச்சயம் நல்லாட்சி தருவார்கள் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை சத்தியமூர்த்தி பவனில், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்றார். 

அதன்பின் செய்தியாளர்களிடம் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:-

கவர்னர் உரை மூலம், தமிழகத்தில் புதிய வெளிச்சம் பாய்ச்சி இருப்பதாகவும், பொருளாதார வளர்ச்சி மேம்படும் என்றும் கூறினார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில், குற்றவாளிகளை குற்றவாளிகளாக கருத வேண்டும். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் திமுகவின் நிலை வேறு, தங்களின் கருத்து வேறு என்று உறுதி பட தெரிவித்தார்.

வரியை எதில் குறைப்பது, எதில் வரியை கூட்டுவது, எப்படி மாநில அரசின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது என்பதற்காக தான் ரகுராம் ராஜன் போன்ற மிகச் சிறந்த பொருளாதார மேதைகளை இந்த ஆய்வு குழுவில் சேர்த்துள்ளார்கள். 

வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக அரசுக்கு மூச்சுவிட நேரம் வழங்க வேண்டும். திமுக அரசுக்கு கால அவகாசம் கொடுங்கள், நம்பிக்கையோடு இருங்கள் நிச்சயம் நல்லாட்சி தருவார்கள். 

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story