ஒன்றிய அரசு என அழைப்பது ஏன்? பா.ஜ.க எம்.எல்.ஏ. கேள்விக்கு மு.க.ஸ்டாலின் விளக்கம்


ஒன்றிய அரசு என அழைப்பது ஏன்? பா.ஜ.க எம்.எல்.ஏ. கேள்விக்கு மு.க.ஸ்டாலின் விளக்கம்
x
தினத்தந்தி 23 Jun 2021 7:08 AM GMT (Updated: 2021-06-23T12:38:01+05:30)

ஒன்றிய அரசு என அழைப்பது ஏன்? பா.ஜ.க எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் கேள்விக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை

தமிழக சட்டசபையின் 3-வது நாள் கூட்டம் இன்று தொடங்கியது. கூட்டத்தில் ஒன்றிய அரசு என அழைப்பது ஏன்? பா.ஜ.க எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் கேள்விக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசினார். 

அப்போது அவர் ஒன்றிய அரசு என சொல்வதை சமூக குற்றம் போல யாரும் நினைக்க வேண்டாம்; சட்டத்தில் என்ன கூறப்பட்டுள்ளதோ அதை தான் சொல்கிறோம்.

இந்தியா மாநிலங்களை உள்ளடக்கிய ஒன்றியமாக இருப்பதை நாங்கள் பயன்படுத்துகிறோம்; சட்டத்தில் இல்லாததை நாங்கள் சொல்லவில்லை.

திமுகவின் 1957-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் இந்திய யூனியன் என்று தான் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.ஒன்றிய அரசு என்ற சொல்லைக் கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் பயன்படுத்துகிறோம் என கூறினார்.

Next Story