வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு - மு.க.ஸ்டாலின்


வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு - மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 23 Jun 2021 9:34 AM GMT (Updated: 23 Jun 2021 9:34 AM GMT)

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை

கவர்னர்  உரை மீதான விவாதத்தின்போது பேசிய பா.ம.க. எம்.எல்.ஏ. ஜி.கே.மணி, வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்துப் பேசிய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனக்கு இடஒதுக்கீடு தொடர்பாக கடிதம் ஒன்றினை அனுப்பினார். அந்த கடிதத்தில் 10.5 சதவீத விழுக்காடு இட ஒதுக்கீட்டின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி உள்ளார்.

மேலும், இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற வழிகாட்டுதல் மற்றும் அரசாணையை வழங்க வேண்டும் என கடிதத்தில் கேட்டுள்ளார். ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு கொரோனா தடுப்பு பணிகளில் கவனம் செலுத்தி வந்த நிலையில், தற்போதுதான் அரசு மூச்சுவிட ஆரம்பித்துள்ளது, வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என கூறினார்.

Next Story