அ.தி.மு.க. நிர்வாகிகள் 5 பேர் நீக்கம்; சசிகலாவுடன் பேசியதற்காக நடவடிக்கை


அ.தி.மு.க. நிர்வாகிகள் 5 பேர் நீக்கம்; சசிகலாவுடன் பேசியதற்காக நடவடிக்கை
x
தினத்தந்தி 24 Jun 2021 3:29 PM GMT (Updated: 24 Jun 2021 3:29 PM GMT)

அ.தி.மு.க. நிர்வாகிகள் 5 பேர் சசிகலாவுடன் தொலைபேசியில் தொடர்ந்து பேசி வந்த நிலையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர்.



சென்னை,

அ.தி.மு.க. தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஓ. பன்னீர் செல்வம் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் அந்த கூட்டத்தில் அ.தி.மு.க.வின் செய்தி தொடர்பாளர் புகழேந்தியை கட்சியை விட்டு நீக்குவதாக அறிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து மேலும் 5 பேரை அ.தி.மு.க. தலைமை, கட்சியில் இருந்து நீக்கியுள்ளது. அவர்கள் 5 பேரின் பெயர்களையும் வெளியிட்டு கட்சியினர் அவர்களோடு எந்த தொடர்பும் வைத்து கொள்ள கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.

இதன்படி, சேலம் புறநகர் மாவட்ட மாணவர் அணி இணை செயலாளர் ராமகிருஷ்ணன், (போடிநாயக்கன்பட்டி)

சிவகங்கை மாவட்ட புரட்சித்தலைவி பேரவை இணை செயலாளர் சரவணன்

சண்முகபிரியா, (மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர்)

திருநெல்வேலி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற முன்னாள் இணை செயலாளர் திம்மராஜபுரம் ராஜகோபால்

திரு. டி. சுந்தர்ராஜ். (தச்சநல்லூர் பகுதி மாணவர் அணி இணை செயலாளர்) ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கி அ.தி.மு.க. தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.


Next Story