மொகஞ்சதாரோ, ஹரப்பா நகரத்திற்கு முன்னரே கீழடியில் மனிதர்கள் வாழ்ந்து உள்ளனர்-அமைச்சர் ஏ.வ.வேலு

மொகஞ்சதாரோ, ஹரப்பா நகரத்திற்கு முன்னரே கீழடியில் மனிதர்கள் வாழ்ந்து உள்ளனர் என பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு கூறினார்.
சென்னை
கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வு பணிகள் மற்றும் அருங்காட்சியக கட்டிட பணிகளை அமைச்சர்கள் எ.வ.வேலு, பெரியகருப்பன், மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்
பின்னர் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது:-
கீழடியில் அருங்காட்சியகம் 60 சதவீத பணிகள் முடிந்து இருக்க வேண்டும், ஆனால் 17 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ளது.
முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி நேரில் ஆய்வு செய்கிறோம்; பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்!”
மொகஞ்சதாரோ, ஹரப்பா நகரத்திற்கு முன்னரே கீழடியில் மனிதர்கள் வாழ்ந்து உள்ளனர்; 31,000 சதுர அடியில் கீழடியில் அருங்காட்சியகம் கட்டப்பட்டு வருகிறது என கூறினார்.
Related Tags :
Next Story