தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு


தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
x
தினத்தந்தி 26 Jun 2021 5:34 PM GMT (Updated: 2021-06-26T23:04:42+05:30)

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது.  இதனால் வெப்பம் ஓரளவு தணிந்து காணப்படுகிறது.  இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்குள் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.

இதன்படி, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Next Story