சென்னையில் கொரோனா தடுப்பூசி முகாம் ரத்து; மக்கள் அவதி


சென்னையில் கொரோனா தடுப்பூசி முகாம் ரத்து; மக்கள் அவதி
x
தினத்தந்தி 9 July 2021 6:08 AM GMT (Updated: 2021-07-09T11:38:24+05:30)

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று ரத்து செய்யப்பட்டு உள்ளது.

சென்னை,

நாட்டில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்காக கடந்த ஜனவரி 16ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றன.  இதன்பின் மே 1ந்தேதியில் இருந்து 18 வயது கடந்த அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது.

இந்நிலையில், பல்வேறு மாநிலங்களில் போதிய தடுப்பூசிகள் இன்றி பணிகள் பாதிப்படைந்து உள்ளன.  இதேபோன்று தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவியது. தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசிகள் ஒதுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தடுப்பூசி மருந்து பற்றாக்குறை காரணமாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்குமுன், 3 நாள்களுக்கு தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்பட்டு நேற்று அதற்கான பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் மருந்து பற்றாக்குறை காரணமாக தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளது.  இதனால் அப்பகுதி மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள முடியாமல் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.


Next Story