தமிழ்நாட்டின் அனைத்து ரேஷன் கடைகளிலும் புகார் பதிவேட்டை பராமரிக்க உத்தரவு


தமிழ்நாட்டின் அனைத்து ரேஷன் கடைகளிலும் புகார் பதிவேட்டை பராமரிக்க உத்தரவு
x
தினத்தந்தி 10 July 2021 8:35 AM GMT (Updated: 2021-07-10T14:05:28+05:30)

தமிழ்நாட்டின் அனைத்து ரேஷன் கடைகளிலும் புகார் பதிவேட்டை பராமரிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.


சென்னை

இது தொடர்பாக அனைத்து கூட்டுறவு சங்க பதிவாளர்களுக்கும் தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் நசிமுத்தின் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் புகார் பதிவேட்டை பராமரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். புகார்களை இணையவழியில் தெரிவிக்க பல்வேறு சிரமங்கள் உள்ளதாக புகார்கள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரமங்களை குறைக்கும் வகையில் அந்தந்தக் கடைகளில் நேரடியாக எழுத்து மூலம் தெரிவிக்கும் வகையில் புகார் பதிவேட்டை வைக்கவேண்டும் எனவும், தொடர்புடைய அலுவலர்கள் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story