ஓய்வூதியர் குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்திற்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு - தமிழக அரசு உத்தரவு


ஓய்வூதியர் குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்திற்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு - தமிழக அரசு உத்தரவு
x
தினத்தந்தி 10 July 2021 12:39 PM GMT (Updated: 2021-07-10T18:09:53+05:30)

ஓய்வூதியர்கள் குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்திற்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

ஓய்வூதியத் துறைக்கான நிதி பற்றாக்குறையை போக்கும் வகையில் கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்து உத்தரவிட வேண்டும் என ஓய்வூதியதாரர்களுக்கான இயக்குனர் அலுவலகத்தில் இருந்து தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. 

இதனை பரிசீலனை செய்த தமிழக அரசு ஓய்வூதியர்கள் குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்திற்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் ஓய்வூதியதாரர்கள் செலுத்தக்கூடிய மாதாந்திர பங்களிப்புத் தொகையை 80 ரூபாயில் இருந்து 150 ரூபாயாக அரசு உயர்த்தியுள்ளது. 

Next Story