சுருட்டப்பள்ளி சிவன் கோவிலில் பன்வாரிலால் புரோகித் சாமி தரிசனம்


சுருட்டப்பள்ளி சிவன் கோவிலில் பன்வாரிலால் புரோகித்  சாமி தரிசனம்
x
தினத்தந்தி 11 July 2021 8:02 PM GMT (Updated: 2021-07-12T01:32:07+05:30)

சுருட்டப்பள்ளியில் சயன கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் பள்ளிகொண்டீஸ்வரரை வழிபட தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கோவிலுக்கு வந்தார்.

ஸ்ரீகாளஹஸ்தி, 

சித்தூர் மாவட்டம் நாகலாபுரம் மண்டலம் சுருட்டப்பள்ளியில் சயன கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் பள்ளிகொண்டீஸ்வரரை வழிபட தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று கோவிலுக்கு வந்தார். தமிழக கவர்னருக்கு கோவில் சம்பிரதாயப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவில் அறங்காவலர் குழு தலைவர் முனிசேகர்ரெட்டி, திருப்பதி வருவாய் கோட்டாட்சியர் கனகநரசாரெட்டி, சித்தூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், கோவில் செயல் அலுவலர் ரவீந்திரராஜு, தாசில்தார் சுப்பிரமணியம் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்து சாமி தரிசன ஏற்பாடுகளை செய்து வைத்தனர். கோவிலில் தமிழக கவர்னர், கோ-பூஜை நடத்தி சர்வ மங்கலா சமேத பள்ளிகொண்டீஸ்வரரை தரிசனம் செய்தார்.

முன்னதாக பிரதோஷ நந்தீஸ்வரருக்கு சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டது. அதில் கவர்னர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு, வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓதி ஆசி வழங்கினர். கவர்னருக்கு கோவில் பிரசாதம், சாமி படம் வழங்கப்பட்டது. பின்னர் தமிழக கவர்னர் காரில் சென்னைக்கு திரும்பினார்.

Next Story