தமிழகத்தில் இன்று 2,652- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு


கோப்பு படம் (பிடிஐ)
x
கோப்பு படம் (பிடிஐ)
தினத்தந்தி 12 July 2021 2:57 PM GMT (Updated: 2021-07-12T20:27:33+05:30)

தமிழகத்தில் 52-வது நாளாக கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.

சென்னை,

தமிழகத்தில் மேலும் 2,652- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-  தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,652- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 25,21, 438- ஆக உயர்ந்துள்ளது.  

தொற்று பாதிப்பில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3,104- ஆக உள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக இன்று ஒரு நாளில் மட்டு 36- பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் நேற்று உயிரிழப்பு எதுவும் பதிவாகாமல் இருந்தது. ஆனால், இன்று 6 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.  

கொரோனா தொற்று பாதிப்பைக் கண்டறிய இன்று 1,40,463- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 31,819- ஆக உள்ளது. 

Next Story