‘நீட்' தேர்வின் தாக்கம்: இன்று அறிக்கை தாக்கல் செய்யும் நீதிபதி ஏ.கே.ராஜன் குழு


‘நீட் தேர்வின் தாக்கம்: இன்று அறிக்கை தாக்கல் செய்யும் நீதிபதி ஏ.கே.ராஜன் குழு
x
தினத்தந்தி 14 July 2021 12:02 AM GMT (Updated: 2021-07-14T05:32:20+05:30)

‘நீட்' தேர்வின் தாக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட நீதிபதி ஏ.கே.ராஜன் குழு இன்று அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது.

சென்னை, 

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்ந்து அது தொடர்பான அறிக்கையை தமிழக அரசுக்கு தெரிவிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, அந்த குழுவினர் நீட் தேர்வின் தாக்கம் குறித்து புள்ளி விவரங்களின் அடிப்படையில் ஆராய்ந்து வந்தனர்.

இதுதவிர பொது மக்களிடம் இருந்தும் நீட் தேர்வின் தாக்கம் தொடர்பான கருத்துகளை கேட்டு பெற்றனர். இந்தநிலையில், இந்த குழுவுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கிடையில் தமிழக அரசு, இந்த குழுவுக்கு வழங்கிய அவகாசமும் கடந்த 10-ந் தேதியுடன் முடிவடைந்த நிலையில், ஐகோர்ட்டின் வழக்கின் உத்தரவுக்காக குழு காத்திருந்தது. இந்த சூழ்நிலையில், சென்னை ஐகோர்ட்டில் இந்த குழுவுக்கு எதிரான வழக்கு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து, நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவினர், தயாரித்து வைத்து இருக்கும் அறிக்கையை இன்று (புதன்கிழமை) சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


Next Story