"திருப்பதிக்கு இணையாக தமிழக கோவில்கள்" - அமைச்சர் சேகர்பாபு


திருப்பதிக்கு இணையாக தமிழக கோவில்கள் - அமைச்சர் சேகர்பாபு
x
தினத்தந்தி 14 July 2021 1:24 PM IST (Updated: 14 July 2021 1:28 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களை திருப்பதிக்கு இணையாக சீரமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

சென்னை,

சென்னை வேளச்சேரியில் உள்ள மிகவும் பழமையான வாசுதேவ பெருமாள் கோவில்  சிதலமடைந்துள்ளதை அமைச்சர் சேகர்பாபு நேரில் சென்று ஆய்வு செய்தார்

அதன் பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில்,

தமிழகத்தில் உள்ள கோவில்களின் வரவு செலவு கணக்குகளை இணையத்தில் வெளியிடுவது குறித்த பணிகள் நடைபெற்று வருகிறது. இது விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும். அறநிலையத்துறையின் நடவடிக்கைகள் வெளிப்படை தன்மையோடு இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களை சீரமைப்பது தொடர்பான கூட்டம் வரும் 17-ஆம் தேதி நடைபெறும். பல திருக்கோவில்களை திருப்பதிக்கு இணையாக உருவாக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் உத்தரவிட்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக முக்கிய கோவில்களை திருப்பதிக்கு இணையாக சீரமைக்க இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
1 More update

Next Story