மாநில செய்திகள்

12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வெளியீடு எப்போது? அமைச்சர் பதில் + "||" + When will the Class 12 mark sheet be released? The Minister replied

12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வெளியீடு எப்போது? அமைச்சர் பதில்

12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வெளியீடு எப்போது? அமைச்சர் பதில்
12ம் வகுப்புக்கான மதிப்பெண் பட்டியல் வெளியீடு எப்போது என்பது பற்றி அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலளித்து உள்ளார்.


சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 12ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றனர் என அறிவிக்கப்பட்டது.  எனினும், கல்லூரியில் சேருவதற்கு மாணவர்களுக்கு 12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் தேவை என்பதால் மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணியை சிறப்பு குழு மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் மதிப்பெண் பட்டியல் தயாரிப்பது மற்றும் பள்ளிகள் திறப்பது குறித்து தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களிடம் ஆலோசனை செய்துள்ளதாகவும் மதிப்பெண் பட்டியல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசித்து வருவதாகவும் பள்ளிகள் திறக்கும் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. கடலூரில் நெல் கொள்முதல் நிலையங்கள் முறையாக செயல்படுகின்றன எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதில்
கடலூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் முறையாக செயல்பட்டு வருகின்றன என்று அமைச்சர் சக்கரபாணி பதில் அளித்துள்ளார்.
2. ‘நீட்’ தேர்வு உயிரிழப்புகளுக்கு யார் காரணம்? அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்
‘நீட்’ தேர்வு உயிரிழப்புகளுக்கு யார் காரணம்? என்பது குறித்து மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார்.
3. தகவல் தொழில்நுட்ப புதிய விதிகள் சமூக வலைதளங்களை ஒழுங்குபடுத்தவே கொண்டு வரப்பட்டுள்ளன மத்திய அரசு ஐகோர்ட்டில் பதில்
தகவல் தொழில்நுட்ப புதிய விதிகள் சமூக வலைதளங்களை ஒழுங்குபடுத்தவே கொண்டுவரப்பட்டுள்ளன என்று சென்னை ஐகோர்ட்டில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
4. கருணாநிதி நூலகம்; ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள், மாற்ற தயார்-செல்லூர் ராஜூக்கு மு.க.ஸ்டாலின் பதில்
மதுரையில் கருணாநிதி பெயரில் கட்டப்படும் நூலகத்திற்கான இடத்தில் பென்னிகுவிக் வசித்ததற்கான ஆதாரம் ஏதும் இல்லை என்றும், ஆதாரம் இருந்தால் நிச்சயமாக அதை மாற்றுவதற்கு எந்த நேரத்திலும் தாங்கள் தயாராக இருப்பதாக செல்லூர் ராஜூக்கு, மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.
5. தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் பணிகள் நடைபெறவில்லை கனிமொழிக்கு மத்திய மந்திரி பதில்
தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் பணிகள் நடைபெறவில்லை கனிமொழிக்கு மத்திய மந்திரி பதில்.