சென்னையில் 50 சதவீத மக்கள் கூட முககவசம் அணிவதில்லை - ஆய்வில் தகவல்


சென்னையில் 50 சதவீத  மக்கள் கூட முககவசம் அணிவதில்லை - ஆய்வில் தகவல்
x
தினத்தந்தி 17 July 2021 12:43 PM IST (Updated: 17 July 2021 12:43 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் 50 சதவீத மக்கள் கூட முககவசம் அணிவதில்லை என ஒரு ஆய்வில் தெரியவந்து உள்ளது.

சென்னை

இந்திய மருத்துவ ஆராய்சி கவுன்சில்   மற்றும் சென்னை மாநகராட்சி இணைந்து முககவசம் அணிபவர்கள் தொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்தின. 

கடந்த ஆண்டு அக்டோபர், டிசம்பர் மற்றும் இந்த ஆண்டு மார்ச், ஜூலை ஆகிய 4 மாதங்களில் 4 கட்டங்களாக நடத்தப்பட்ட ஆய்வின் முடிவு வெளியாகியுள்ளது. 

இதன்படி குடிசை பகுதிகளில் கடந்த அக்டோபர் மாதம் 28 சதவீத  மக்களே முககவசம் அணிந்திருந்தனர். அதுவே படிப்படியாக உயர்ந்து ஜூலை மாதம் 41 சத்வீதமாக அதிகரித்துள்ளது. அதுவே பிற பகுதிகளில், அக்டோபர் மாதம் 36 சதவீத மக்கள் முககவசம் அணிந்திருந்தனர். 

தற்போது அந்த விகிதம் 47 ஆக அதிகரித்துள்ளது என தெரியவந்து உள்ளது

 சென்னையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் முககவசம் அணிவோர் விகிதம் உயர்ந்திருந்தாலும் இன்னமும் அது 50ஐ கூட தாண்டவில்லை என்பதே உண்மை.
1 More update

Next Story