சசிகலா எத்தனை பொய்யான தகவல்களை பரப்பினாலும் அ.தி.மு.க.வை வீழ்த்த முடியாது- எடப்பாடி பழனிசாமி


சசிகலா எத்தனை பொய்யான தகவல்களை பரப்பினாலும் அ.தி.மு.க.வை வீழ்த்த முடியாது- எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 19 July 2021 7:46 AM GMT (Updated: 2021-07-19T13:16:41+05:30)

ஆரம்பக் காலத்தில் விழிப்புணர்வு இல்லாமல் கொரோனா தடுப்பூசி வீணடிக்கப்பட்டது என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சேலம் 

சேலம் மாவட்டம் எடப்பாடியில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களை தி.மு.க. ஏமாற்றி விட்டது வாக்குகளைப் பெறுவதற்காக பொய்யான வாக்குறுதிகளை கூறி ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் தி.மு.க. மக்களை ஏமாற்றி விட்டது.

சசிகலா எத்தனை பொய்யான தகவல்களை பரப்பினாலும் அ.தி.மு.க.வை வீழ்த்த முடியாது; சசிகலா அ.தி.மு.க.விலிருந்த காலகட்டத்திலும் தேர்தலில் அ.தி.மு.க .தோல்வியை சந்தித்துள்ளது.

கொரோனா தடுப்பூசிகளை நாங்கள் வேண்டுமென்றே வீணடிக்கவில்லை. ஆரம்பக் காலத்தில் விழிப்புணர்வு இல்லாமல் கொரோனா தடுப்பூசி வீணடிக்கப்பட்டது என கூறினார்.
Next Story