சிவாஜி கணேசனின் நினைவு தமிழர் நெஞ்சில் அலையடித்தபடியே இருக்கும் கமல்ஹாசன் டுவிட்டர் பதிவு


சிவாஜி கணேசனின் நினைவு தமிழர் நெஞ்சில் அலையடித்தபடியே இருக்கும் கமல்ஹாசன் டுவிட்டர் பதிவு
x
தினத்தந்தி 21 July 2021 10:10 PM GMT (Updated: 2021-07-22T03:40:58+05:30)

ஏதோ ஒரு திரையில் படம் என ஒன்று சலனமுறும் காலம் வரை சிவாஜி கணேசனின் நினைவு தமிழர் நெஞ்சில் அலையடித்தபடியே இருக்கும் கமல்ஹாசன் டுவிட்டர் பதிவு.

சென்னை,

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தை ‘ஒன் டிரில்லியன்' பொருளாதாரமாக மாற்ற வேண்டும், மாற்ற முடியும் எனும் இலக்கினை முதன் முதலில் முன்வைத்த கட்சி மக்கள் நீதி மய்யம். இப்போது தமிழக முதல்-அமைச்சரும் 2030-ல் அந்த இலக்கை எட்டும் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார் என்பதில் மகிழ்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல கமல்ஹாசன் வெளியிட்ட மற்றொரு டுவிட்டர் பதிவில், “திரை நடிப்புக்கென்று ஒரு மைல் கல்லை நிர்ணயித்து சென்றிருக்கும் கலைஞர் சிவாஜி கணேசனின் நினைவு நாள் இன்று (நேற்று). ஏதோ ஒரு திரையில் படம் என ஒன்று சலனமுறும் காலம்வரை நடிகர் திலகத்தின் நினைவு தமிழர் நெஞ்சில் அலையடித்தபடியே இருக்கும்” என்று கூறியுள்ளார்.

Next Story