செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை விரைவில் முதல்-அமைச்சர் துவக்கி வைப்பார் - அமைச்சர் தங்கம் தென்னரசு


செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை விரைவில் முதல்-அமைச்சர் துவக்கி வைப்பார் - அமைச்சர் தங்கம் தென்னரசு
x
தினத்தந்தி 22 July 2021 5:22 PM IST (Updated: 22 July 2021 5:22 PM IST)
t-max-icont-min-icon

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை விரைவில் முதல்-அமைச்சர் துவக்கி வைப்பார் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ் வளர்ச்சித்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னை தலைமைசெயலகத்தில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் இன்று நடைபெற்றது.

அதன்பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில்,

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்காக சென்னை பெரும்பாக்கத்தில் தனி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் துவக்கி வைப்பார் . அனைவரின் விருப்பமான உலக தமிழ்மொழி மாநாட்டை நடத்துவது தொடர்பாக முதல்-அமைச்சர் முடிவு செய்வார்.

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் அகழாய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கீழடி நமது நாகரீகத்தின் தொட்டில்.  தஞ்சை தமிழ் பல்கலைகழகத்தில் உயர் ஆய்வு மையம் உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வர ஆலோசனை நடத்தப்பட்டது. 

இவ்வாறு அவர் கூறினார்.
1 More update

Next Story