திருமயம் உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஹெச்.ராஜா ஆஜர்


திருமயம் உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஹெச்.ராஜா ஆஜர்
x
தினத்தந்தி 23 July 2021 12:03 PM IST (Updated: 23 July 2021 12:03 PM IST)
t-max-icont-min-icon

திருமயம் உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்காக பா.ஜ.க. முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா நேரில் ஆஜராகியுள்ளார்.

மதுரை,

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு விநாயகா் சதுா்த்தி விழாவுக்கு மேடை அமைப்பதில் ஏற்பட்ட சா்ச்சையில் நீதிமன்றத்தையும், காவல் துறையினரையும் விமா்சித்துப் பேசியதாக ஹெச்.ராஜா மீது திருமயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த விவகாரத்தில் ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் நேரில் ஆஜராகி அவா் மன்னிப்பு கோரினாா்.

இந்நிலையில் இந்த வழக்கில் தன்னை காவல்துறையினர் கைது செய்யக்கூடாது என ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் முன்ஜாமீன் கோரி ஹெச்.ராஜா மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், முன் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்ததோடு, இந்த வழக்கின் விசாரணைக்காக கீழமை நீதிமன்றத்தில் ஜூலை 23 ஆம் தேதி ஹெச்.ராஜா நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர்.

அதன்படி இன்று திருமயம் உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்காக பா.ஜ.க. முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா நேரில் ஆஜராகியுள்ளார்.
1 More update

Next Story