கோயில் சொத்துக்கள் தனி நபர்களுக்கு சொந்தமானவை அல்ல - அமைச்சர் சேகர்பாபு

அறநிலையத்துறை கோயில் சொத்துக்கள் தனியாருக்கோ, தனி நபருக்கோ சொந்தமானவை அல்ல என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் உள்ள சுகவனேஷ்வர் கோயில் மற்றும் கோட்டை மாரியம்மன் கோயிலில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவரிடம், கோயில் நிலங்கள் தனி நபர்களுக்கு சொந்தமானவை என எழுப்பப்படும் வாதங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அவர், அறநிலையத்துறை கோயில்களின் சொத்துக்கள் தனியாருக்கோ அல்லது தனி நபர்களுக்கோ சொந்தமானவை அல்ல என்று தெரிவித்தார். மேலும் இது குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முன்வைக்கப்படும் வாதம் என்று குற்றம் சாட்டிய அவர், குறைகள் எதேனும் இருந்தால் அதனை சுட்டிக்காட்ட வேண்டும் என்றும் அரசு குறைகளை களைய தயாராக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
Related Tags :
Next Story