கோவை, தேனி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

கோவை, தேனி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
கோவை, தேனி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் இன்று கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், கனமழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், எஞ்சிய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story