பொறியியல் படிப்புகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம்


கோப்புக்காட்சி
x
கோப்புக்காட்சி
தினத்தந்தி 25 July 2021 11:54 AM GMT (Updated: 2021-07-25T17:24:51+05:30)

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.


சென்னை,

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டு அவர்களுக்கான மதிப்பெண் தசம அடிப்படையில் வழங்கப்பட்டது. 

இந்தநிலையில் பி.இ.,பி.டெக்., போன்ற பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பம் பதிவு நாளை முதல் தொடங்குகிறது. பொறியியல் படிப்புகளில் சேர www.tneaonline.org என்ற இணையதளத்தில் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் எனவும்  ஆகஸ்ட் 24-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Next Story