என்ஜினீயரிங் படிப்பு: செமஸ்டர் வகுப்புகள் 18-ந்தேதி தொடங்கும் அண்ணா பல்கலைக்கழகம் தகவல்


என்ஜினீயரிங் படிப்பு: செமஸ்டர் வகுப்புகள் 18-ந்தேதி தொடங்கும் அண்ணா பல்கலைக்கழகம் தகவல்
x
தினத்தந்தி 27 July 2021 10:50 PM GMT (Updated: 2021-07-28T04:20:25+05:30)

என்ஜினீயரிங் படிப்பு: செமஸ்டர் வகுப்புகள் 18-ந்தேதி தொடங்கும் அண்ணா பல்கலைக்கழகம் தகவல்.

சென்னை,

கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த ஆண்டு முதல் கல்லூரிகளில் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தொடர்ந்து நோய்த்தொற்றின் தாக்கம் இருப்பதால் நடப்பு செமஸ்டருக்கான என்ஜினீயரிங் படிப்பு வகுப்புகளும் ஆன்லைன் மூலமாகவே நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, என்ஜினீயரிங் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புக்கான (முதலாம் ஆண்டு மாணவர்களை தவிர) நவம்பர், டிசம்பர் செமஸ்டர் வகுப்புகள் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 18-ந்தேதி முதல் தொடங்கப்பட வேண்டும் என்றும், இந்த செமஸ்டருக்கான கடைசி வேலை நாட்கள் நவம்பர் 30-ந்தேதி என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதனைத் தொடர்ந்து இவர்களுக்கான செய்முறை தேர்வு டிசம்பர் 2-ந்தேதி தொடங்கப்பட்டு நடைபெறும்.

செமஸ்டர் தேர்வை பொறுத்தவரையில், டிசம்பர் 13-ந்தேதி தொடங்கப்பட இருக்கிறது. இந்த செமஸ்டர் தேர்வு முடிவடைந்ததும், அடுத்த செமஸ்டருக்கான வகுப்புகள் அடுத்த ஆண்டு (2022) ஜனவரி மாதம் 19-ந்தேதி தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அரசு வெளியிட்டிருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த வகுப்புகள் நடைபெற வேண்டும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

Next Story