ராமேஸ்வரம் கோயிலில் ஆடி திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்


ராமேஸ்வரம் கோயிலில் ஆடி திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்
x
தினத்தந்தி 1 Aug 2021 11:07 AM GMT (Updated: 2021-08-01T16:37:16+05:30)

ராமேஸ்வரம் கோயிலில் ஆடி திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

ராமேஸ்வரம்,

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில், ஆடி திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. அம்பாள் பர்வதவர்த்தினி சன்னிதியின் முன்பாக உள்ள தங்க கொடிமரத்தில் வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. தங்க கொடிமரத்திற்கும் அம்பாள் பர்வதவர்த்தினிக்கும் சிறப்பு தீபாராதணை காண்பிக்கப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக அமாவாசை நிகழ்ச்சி, தேரோட்ட நிகழ்ச்சி உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தபசு திருவிழா, திருக்கல்யாண திருவிழா ஆகியவை நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story