மாநில செய்திகள்

தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை + "||" + Teen commits suicide by hanging

தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை

தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை
கணவர் இறந்த துக்கம் தாங்காமல் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
புதுவை பிச்சவீரன்பட்டு புதுநகரை சேர்ந்தவர் சிவசங்கரன். இவரது மனைவி இளமதி (வயது 25). சிவசங்கரன் கொரோனா காரணமாக சமீபத்தில் மரணம் அடைந்தார். இதனால் இளமதி மிகுந்த சோகத்தில் இருந்து வந்தார். இந்தநிலையில் சிவசங்கரனின் தம்பி மகளின் பிறந்தநாளையொட்டி காரைக்காலுக்கு இளமதியின் மாமியார் மற்றும் உறவினர்கள் சென்றிருந்தனர். இளமதி மட்டும் வீட்டில் தனியாக இருந்ததால் உறவினர்கள் சுலோச்சனா மற்றும் காவியா ஆகியோர் வீட்டில் தங்கியுள்ளனர். 
இந்தநிலையில் வீட்டில் உள்ள ஒரு அறையில் இளமதி மின்விசிறியில் தூக்குப்போட்டு தொங்கியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், இளமதியின் உறவினரான வெங்கடகிருஷ்ணனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர் விரைந்து வந்து இளமதியை தூக்கில் இருந்து இறக்கி கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள், இளமதி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
கொரோனாவால் கணவர் இறந்த துக்கம் தாங்காமல் அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
---


தொடர்புடைய செய்திகள்

1. கடமலைக்குண்டுவில் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை
கடமலைக்குண்டுவில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2. தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை
தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை
3. தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை
தனியார் ஆஸ்பத்திரியில் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார்.
4. தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை
நாகையில் தூக்குப்போட்டு இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்திவருகிறார்.
5. தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை
தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.