வருமான வரி படிவங்கள் தாக்கல் செய்ய வருகிற 31-ந் தேதி வரை கால அவகாசம்


வருமான வரி படிவங்கள் தாக்கல் செய்ய வருகிற 31-ந் தேதி வரை கால அவகாசம்
x
தினத்தந்தி 4 Aug 2021 2:52 AM GMT (Updated: 4 Aug 2021 2:52 AM GMT)

வருமான வரி படிவங்கள் தாக்கல் செய்ய வருகிற 31-ந் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை, 

வருமான வரித்துறையில் மின்னணு முறையில் வரி செலுத்துபவர்களின் நலன் கருதி பல்வேறு படிவங்கள் தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. குறிப்பாக காலாண்டு அறிக்கை படிவம் 15 சிசி மற்றும் 2020-2021-ம் நிதியாண்டுக்கான சமநிலை வரி அறிக்கை படிவம் எண்-1 ஆகியவை வருகிற 31-ந் தேதிக்குள் பூர்த்தி செய்து வழங்க கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

அதேபோல், முந்தைய ஆண்டான 2020-2021-ம் ஆண்டிற்கான முதலீட்டு நிதியால் செலுத்தப்பட்ட அல்லது வரவு வைக்கப்படும் வருமான அறிக்கை படிவம் எண்-64 டி மற்றும் 64-சி படிவம் ஆகியவற்றை பூர்த்தி செய்து வழங்க வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பான கூடுதல் விவரங்கள் www.incometaxindia.gov.inஎன்ற அதிகாரபூர்வ இணையதள முகவரியிலும் வெளியிடப்பட்டு உள்ளது என்று வருமான வரித்துறை கமிஷனர் சுரபி அலுவாலியா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

Next Story