நடிகை மீரா மிதுன் மீது 7 பிாிவுகளில் வழக்குப்பதிவு கைது செய்ய போலீசார் தீவிரம்


நடிகை மீரா மிதுன் மீது 7 பிாிவுகளில் வழக்குப்பதிவு கைது செய்ய போலீசார் தீவிரம்
x
தினத்தந்தி 9 Aug 2021 4:37 AM IST (Updated: 9 Aug 2021 4:37 AM IST)
t-max-icont-min-icon

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் புகாரின் பேரில் நடிகை மீரா மிதுன் மீது போலீசார் 7 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் வன்னியரசு போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலை சந்தித்து பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகாரில் திரைப்பட நடிகை மீரா மிதுன் தனது டுவிட்டர் பக்கத்தில், தாழ்த்தப்பட்ட மக்கள் பற்றி இழிவான கருத்துகளை பதிவு செய்துள்ளார். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீஸ் விசாரணைக்கு கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

7 பிரிவுகளில் வழக்கு

விசாரணை முடிவில், நடிகை மீரா மிதுன் மீது 7 சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அவர் மீது கைது நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது.
1 More update

Next Story