மின்சார வாரிய இயக்குனர்கள் இடமாற்றம் தமிழக அரசு உத்தரவு


மின்சார வாரிய இயக்குனர்கள் இடமாற்றம் தமிழக அரசு உத்தரவு
x
தினத்தந்தி 10 Aug 2021 3:32 AM IST (Updated: 10 Aug 2021 3:32 AM IST)
t-max-icont-min-icon

மின்சார வாரிய இயக்குனர்கள் இடமாற்றம் தமிழக அரசு உத்தரவு.

சென்னை,

தமிழ்நாடு மின்சார வாரிய வினியோகம் பிரிவு இயக்குனராக பணியாற்றி வந்த எம். செந்தில்வேல், இயக்குனர் இயக்கம் பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அதேபோல், மேலாண்மை இயக்குனராக பணியாற்றி வரும் எஸ்.சண்முகம் கூடுதல் பொறுப்பாக மின்தொடர் அமைப்பு கழகத்தின் திட்ட இயக்குனர் பணியையும் கவனிப்பார்.

சென்னை வடக்கு மண்டல முதன்மை பொறியாளர் (வினியோகம்) வி.பி.இளனி, உற்பத்தி பிரிவு இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். மரபு சாரா எரிசக்தி பிரிவு முதன்மை பொறியாளர் எம்.சிவலிங்கராஜன், வினியோகம் பிரிவு இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இயக்கம் பிரிவு இயக்குனர் ஏ.அசோக்குமார் பணி மாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளார்.

இதற்கான உத்தரவை தமிழக அரசின் முதன்மை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் பிறப்பித்து உள்ளார்.
1 More update

Next Story