கோவைப்புதூரில் உள்ள எஸ்.பி வேலுமணியின் சகோதரர் வீட்டிலும் சோதனை

கோவைப்புதூரில் உள்ள எஸ்.பி வேலுமணியின் சகோதரர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை,
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த புகாரில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோவை குனியமுத்தூரில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் காலை 6 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு சொந்தமான 52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எம்.எல்.ஏ விடுதியில் உள்ள எஸ்.பி வேலுமணியிடமும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கோவைப்புதூரில் உள்ள எஸ்.பி வேலுமணியின் சகோதரர் எஸ்.பி அன்பரசன் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். எஸ்.பி அன்பரசனுக்கு சொந்தமான அலுவலகங்கள், நிறுவனங்கள் என 7 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Related Tags :
Next Story