எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நோக்கில் அதிமுகவினரை குறிவைத்து சோதனை நடத்தப்படுகிறது - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்


எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நோக்கில் அதிமுகவினரை குறிவைத்து சோதனை நடத்தப்படுகிறது - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
x
தினத்தந்தி 10 Aug 2021 6:00 AM GMT (Updated: 10 Aug 2021 6:00 AM GMT)

எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நோக்கில் அதிமுகவினரை குறிவைத்து சோதனை நடத்தப்படுகிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சென்னை,

அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது எஸ்.பி.வேலுமணி தனது பதவியை தவறாக பயன்படுத்தி, ஒப்பந்தங்களை தனது சகோதரர் மற்றும் நெருக்கமானவர்களுக்கு வழங்கியதாக புகார் எழுந்தது. மேலும் டெண்டர்கள் மூலம் முறைகேடு செய்து சொத்து குவித்ததாகவும் புகார் கூறப்பட்டது. 

இதையடுத்து சென்னையில் எம்.எல்.ஏ. விடுதியில் தங்கியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான வீடுகள் உட்பட 52 இடங்களில் சோதனை நடைபெற்று வரும் நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், 

எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நோக்கில் அதிமுகவினரை குறிவைத்து சோதனை நடத்தப்படுகிறது. காவல்துறையினரை ஏவி விட்டு அதிமுகவை களங்கப்படுத்த முயற்சி செய்கின்றனர். எங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை தவறு என நிதீமன்றத்தில் நிரூபிப்போம்,

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story