ஆக.13 முதல் செப். 21 ஆம் தேதி வரை தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்- அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு


ஆக.13 முதல் செப். 21 ஆம் தேதி வரை தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்- அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 10 Aug 2021 6:22 AM GMT (Updated: 2021-08-10T11:52:43+05:30)

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலைவாணர் அரங்கில் சட்ட சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.

சென்னை,

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்ய அலுவல் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. சபாநாயகர் அப்பாவு தலைமயில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரை ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் செப்டம்பர் 21 ஆம் தேதி வரை நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலைவாணர் அரங்கில் சட்ட சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.  வரும் 13 ஆம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. 14 ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. 

Next Story