ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லும் என்று அறிவிக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லும் என்று அறிவிக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 11 Aug 2021 12:12 AM GMT (Updated: 2021-08-11T05:42:20+05:30)

ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லும் என்று அறிவிக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் நியமனத்துக்கு தகுதி பெறுவதற்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு விரைவில் ஆன்லைனில் (இணையதளம் மூலமாக) நடத்தப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழின் செல்லுபடியாகும் காலத்தை ஆயுள்காலமாக மாற்றுவது குறித்து தமிழக அரசு இன்னும் முடிவெடுக்காத நிலையில், அடுத்த தேர்வை நடத்துவது எந்தவகையிலும் நியாயமல்ல. தமிழக சட்டசபை தேர்தலுக்கான தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 177-வது வாக்குறுதியாக ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த வாக்குறுதியை தமிழக அரசு இன்னும் நிறைவேற்றவில்லை.

ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று ஆசிரியர் பணிக்காக 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடந்த 7 ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். தகுதி சான்றிதழின் ஆயுள் நீட்டிக்கப்படாவிட்டால், அவர்களின் அரசு பள்ளி ஆசிரியர் கனவு சிதைந்துவிடும். வயது உள்ளிட்ட காரணங்களால் அவர்களால் மீண்டும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி ஆசிரியர் பணியில் சேருவது சாத்தியமற்றது.

அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் என்ற அறிவிப்பை அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story