நெய்வேலியில் 5 லாரிகளுக்கு தீ வைக்கப்பட்டதால் பதட்டம்


நெய்வேலியில் 5 லாரிகளுக்கு தீ வைக்கப்பட்டதால் பதட்டம்
x
தினத்தந்தி 11 Aug 2021 1:44 PM GMT (Updated: 2021-08-11T19:14:48+05:30)

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் 5 லாரிகளுக்கு தீ வைக்கப்பட்டதால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

நெய்வேலி,

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் நிலக்கரி சுரங்கத்தில் இருந்து இன்று சாம்பல் செல்லும் லாரி மோதி மேலக்குப்பம் பகுதியை சேர்ந்த கோவிந்த் என்பவர் உயிரிழந்தார். 

இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் விபத்தை ஏற்படுத்திய அந்த லாரியை அடித்து நொறுக்கி தீ வைத்து கொளுத்தினர். மொத்தம் 5 லாரிகளுக்கு தீ வைக்கப்பட்டது. மேலும், 30-க்கும் மேற்பட்ட லாரிகள் அடித்து நொறுக்கப்பட்டன.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. பதட்டம் நீடித்து வருவதால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.   

Next Story