எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை நடக்கிறது


எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை நடக்கிறது
x
தினத்தந்தி 12 Aug 2021 3:30 AM IST (Updated: 12 Aug 2021 3:30 AM IST)
t-max-icont-min-icon

எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை நடக்கிறது.

சென்னை,

தமிழக சட்டமன்றத்தில் 2021-22-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற இருப்பதையொட்டி, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் 13-ந்தேதி (நாளை) மாலை 4.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும், சமூக இடைவெளியை கடைபிடித்தும், முக கவசம் அணிந்தும், தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.

13-ந்தேதி (நாளை) அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் மட்டுமே நடைபெற உள்ளது.

மேற்கண்ட தகவல் அ.தி.மு.க. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1 More update

Next Story