கடற்கரை-வேளச்சேரி இடையே கூடுதல் மின்சார ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு


கடற்கரை-வேளச்சேரி இடையே கூடுதல் மின்சார ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x
தினத்தந்தி 12 Aug 2021 1:51 AM GMT (Updated: 2021-08-12T07:21:04+05:30)

கடற்கரை-வேளச்சேரி இடையே கூடுதல் மின்சார ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

சென்னை புறநகர் பகுதிகளுக்கு கூடுதல் மின்சார ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மின்சார ரெயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாகவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க ஏதுவாகவும் கூடுதல் ரெயில்கள் இயக்கப்படும். அதன்படி சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே வாரநாட்களில் 114 மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 140 மின்சார ரெயில்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரை-வேளச்சேரி இடையே இயக்கப்பட்டு வந்த 76 மின்சார ரெயில்கள், தற்போது 96 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story