தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெறுவோருக்கான கட்டணம் மாற்றியமைப்பு - தமிழக அரசு


தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெறுவோருக்கான கட்டணம் மாற்றியமைப்பு - தமிழக அரசு
x
தினத்தந்தி 12 Aug 2021 2:29 AM GMT (Updated: 12 Aug 2021 6:19 AM GMT)

தனியார் மருத்துவமனைகளில் முதல்-அமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொரோனா சிகிச்சை பெறுவோருக்கான கட்டணம் மாற்றியமைத்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசு மருத்துவமனைகளில் மட்டுமல்லாமல், தனியார் மருத்துவமனைகளிலும் மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில், தனியார் மருத்துவமனைகளில் முதல்-அமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொரோனா சிகிச்சை பெறுவோருக்கான கட்டணம் மாற்றியமைத்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன் படி, தீவிரமில்லாதா கொரோனா சிகிச்சைக்கு ரூ.3000 ஆக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

* ஆக்சிஜன் வசதியுடன் கூடிய தீவிரமில்லாத கொரோனா சிகிச்சைக்கு ரூ. 7.500 ஆக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

* கடுமையான சுவாச செயலிழப்பு ஏற்பட்டோருக்கான வெண்டிலேட்டர் சிகிச்சைக்கு ரூ.56,200 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

* வெண்டிலேட்டர் அல்லாத தீவிர சிகிச்சைக்கு நாளொன்றுக்கு ரூ.27,100 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Next Story