மன்னார்குடியில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் திடீர் சோதனை


மன்னார்குடியில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் திடீர் சோதனை
x
தினத்தந்தி 17 Sep 2021 1:41 AM GMT (Updated: 2021-09-17T07:11:35+05:30)

மன்னார்குடியில் தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.

மன்னார்குடி,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். மன்னார்குடி ஆசாத் தெருவை சேர்ந்தவர் பக்ரூதின். இவரின் வீட்டிற்கு நேற்று காலை வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர்.  

பக்ரூதினிடம் சுமார் 6 மணி நேரம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். வீட்டில் நடைபெற்ற அந்த விசாரணைக்கு பின்னர் பக்ரூதினை மேல் விசாரணைக்காக என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னைக்கு அழைத்து சென்றனர். 

இந்தியாவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துடன் பக்ரூதின் தொடர்பில் உள்ளதாக கூறி பக்ரூதினிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் மன்னார்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story