எம்.எட். படிப்பு: நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பம் - கல்லூரிக் கல்வி இயக்குனரகம் அறிவிப்பு


எம்.எட். படிப்பு: நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பம் - கல்லூரிக் கல்வி இயக்குனரகம் அறிவிப்பு
x
தினத்தந்தி 3 Oct 2021 6:15 PM IST (Updated: 3 Oct 2021 6:15 PM IST)
t-max-icont-min-icon

முதுகலை கல்வியியல் பட்டப்படிப்பு முதலாம் ஆண்டில் சேர நாளை முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறைந்து வரும்நிலையில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன. நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தமிழகத்தில் முதுகலை கல்வியியல் பட்டப்படிப்பு முதலாம் ஆண்டில் சேர நாளை முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரிக்கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. அதன்படி, எம்.எட். (M.Ed) படிப்பிற்கு ஆர்வமுள்ள மாணவர்கள் www.tngasaedu.in மற்றும் www.tngasaedu.edu ஆகிய இணையதளங்களில் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story