ஊரக உள்ளாட்சி தேர்தல்: ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை


ஊரக உள்ளாட்சி தேர்தல்: ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை
x
தினத்தந்தி 3 Oct 2021 1:01 PM GMT (Updated: 3 Oct 2021 1:01 PM GMT)

ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

சென்னை,

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டத்தில் வரும் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஒருபக்கம் தேர்தல் நடைபெறும் மாவட்டங்களுக்கு சென்று நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்களுடன் ஆலோசனை நடத்தி வாக்கு சேகரித்து வருகிறார்.

இந்த நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனை தற்போது நடைபெற்று வருகிறது. நெல்லை மாவட்டம் பொன்னாக்குடியில் அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை ஓ.பன்னீர்செல்வம் மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
  • chat