19-ந்தேதி மீலாது நபி - தலைமை காஜி அறிவிப்பு


19-ந்தேதி மீலாது நபி - தலைமை காஜி அறிவிப்பு
x
தினத்தந்தி 8 Oct 2021 4:53 AM IST (Updated: 8 Oct 2021 4:53 AM IST)
t-max-icont-min-icon

வருகிற 19-ந்தேதி மீலாது நபி விழா கொண்டாடப்படும் என தலைமை காஜி அறிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக அரசின் தலைமை காஜி சலாகுதீன் முகம்மது அயூப் வெளியிட்டுள்ளசெய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இஸ்லாமிய ஆண்டான ஹிஜிரி 1443-ம் ஆண்டின் மூன்றாவது மாதமான ரபியுல் அவ்வல் மாதத்தின் பிறை நேற்று (7-ந்தேதி) தெரிந்தது. எனவே வருகிற 19-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று மீலாதுநபி விழா கொண்டாடப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
1 More update

Next Story