எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களில் 16-ந்தேதி சசிகலா மரியாதை


எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களில் 16-ந்தேதி சசிகலா மரியாதை
x
தினத்தந்தி 7 Oct 2021 11:44 PM GMT (Updated: 2021-10-08T05:14:12+05:30)

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களில் 16-ந்தேதி சசிகலா மரியாதை- தீவிர சுற்றுப்பயணத்துக்கும் ஏற்பாடு.

சென்னை,

அ.தி.மு.க.வின் பொன்விழா கொண்டாட்டங்கள் வரும் 17-ந்தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கு முந்தைய நாளான 16-ந்தேதி சசிகலா சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களுக்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

மறுநாள் (17-ந்தேதி) காலை சென்னை தியாகராயநகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல் லத்திற்கும், தொடர்ந்து ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். இல்லத்திற்கும் சசிகலா செல்கிறார். அதன்பிறகு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Next Story