சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு...


சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு...
x
தினத்தந்தி 8 Oct 2021 1:28 AM GMT (Updated: 2021-10-08T06:58:23+05:30)

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளது.

சென்னை, 

பெட்ரோல், டீசல் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. இதனால், அதன் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வந்த பெட்ரோல், டீசல் விலை கடந்த ஆகஸ்டு மாதம் 2-வது வாரத்தில் இருந்து விலை குறைந்து காணப்பட்டது. அதன் பிறகும் அவ்வப்போது விலை சரிந்தது.

தொடர்ந்து விலை சரியும் என்று எதிர்பார்த்து இருந்த நேரத்தில் கடந்த மாதம் 28-ந்தேதியில் இருந்து பெட்ரோல் விலையும், கடந்த மாதம் 24-ந்தேதி முதல் டீசல் விலையும் மீண்டும் உயரத் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக விலை அதிகரித்து கொண்டே வருகிறது.

இதற்கிடையில், சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாய் 75 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 96 ரூபாய் 26 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 26 காசுகள் உயர்ந்து 101 ரூபாய் 26 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 34 காசுகள் உயர்ந்து 96 ரூபாய் 60 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர். 


Next Story